பிரான்சில் தமிழர் தாயக – புலம்பெயர் அரசியல் பிரமுகர்களுடன் மக்கள் சந்திப்பு!

0
243

தாயகத்திலிருந்து முக்கிய அரசியற் பிரமுகர்களும் புலம் பெயர் மண்ணில் அரசியற் பணிகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களும் எதிர் வரும் 03.02.2017 வெள்ளிக்கிழமை பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் பிரெஞ்சு அரசியற்பிரமுகர்களுடன் சுயநிர்ணய உரிமை நோக்கி கருத்தரங்கில் கலந்து தாயகத்தின் தற்போதைய உண்மை நிலையினை தெரியப்படுத்தவுள்ள அதேவேளை பிரான்சு வாழ் தமிழீழ மக்களுடனான சந்திப்பினையும் எதிர் வரும் 04.02.2017 சனிக்கிழமை பி.பகல் 13.00 மணிக்கு லாக்கூர்னேவ் பிரதேசத்திலும் ஏற்பாடு செய்துள்ளோம். இச்சந்திப்பில் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு தாயகத்தின் இன்றைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து அதற்கேற்ற வகையில் எமது ஒத்துழைப்பை நல்கி எமது மண்ணையும், மக்களையும் மீட்டு எமது மக்களுக்கு நீதியான உரிமை கிடைக்கும் வரை உழைப்போம்.
தமிழீழ மக்கள் பேரவை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here