சிறீலங்கா படை முகாங்களுக்கு அண்மையில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி !

0
298

மட்டக்களப்பு – முறக்கொட்டான்சேனை சிறீலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியிலுள்ள தனியார் குடியிருப்புக் காணிக்குள் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் புதை குழியின் அகழ்வு திகதி எதிர்வரும் 20, 21ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.


ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உட்பட மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வி.சி.எஸ்.பெரேரா, சிரேஸ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மாத்தளை சட்ட வைத்திய நிபுணர் டி.ஐ. வைத்தியரெட்ண, புவி சரிதவியல் அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த, கண்டி மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அசித்த கீர்த்தி ஆகியோர் நேற்று வியாழக்கிழமை குறித்த இடத்தை பார்வையிட்டபோது அகழ்வுக்குரிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதை குழியின் அகழ்வு வேலைகள் நேற்று ஆரம்பிக்கப்படும் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தபோதும் அதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த 2016.10.30ம் திகதி முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த திருமதி வான்மதி உதயகுமார் என்ற நபரின் தனியார் காணிக்குள் மலசலகூடம் கட்டுவதற்குரிய குழி வெட்டும்போது ஒரு வித எழும்புத் துண்டுகள் குழியில் இருந்து வெளிக்கிளம்பியதையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் சிறீலங்காகாவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து நீதிவான் உட்பட சட்ட வைத்திய அதிகாரிகள் குறித்த இடத்தை பார்வையிட்டதுடன் ஒருசில மனித எச்சங்களை மேலதிக ஆய்வுக்கு அனுப்பி வைத்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் நேற்று (02) குறித்த இடத்தின் அகழ்வு நடவடிக்கைக்காக சட்ட வைத்திய குழு உட்பட அனைவரும் வருகைதந்திருந்துடன், மேலதிக ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here