சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரருமான நாமல் ராஜபக்ச உள்ளி ட்ட ஐவரின் 9 வங்கிகளில் உள்ள 15 வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்.சி.ஐ.டி.) கொழும்பு மேலதிக நீதிவான் அருண புத்ததாச நேற்று அனுமதி வழங்கினார்.
சட்ட விரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் பணத்தில் 100 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி “ஹலோ கோப்ஸ்” எனும் நிறுவனத்தை கொள்வனவு செய்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்காகவே இந்த அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பரிசோதகர் எம்.எம். சாஜித், நீதிவான் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பித்து மேற்படி அனுமதியைக் கோரியிருந்தார்.