பல்வேறு குற்றச்சாட்டுகளுடன்தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும்அவர்கள் பயன்படுத்திய வாள்கள் மற்றும் கைக்கோ டரிகளும் கைப்பற்றப்பட்டன.
அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் நேற்றுமாலை யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்புத்துறை,துண்டி,கொக்குவில்,கோப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களிடம் இருந்து 7 கூரிய வாள்களும், இரண்டு கைக்கோடரி ,சிறிய கத்தி ஒன்றும் , கைத்தொலைபேசி, முகமூடி தொப்பி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் 17 வயது தொடக்கம் 21 வய திற்கு உட்பட்டவர்கள். இவர்கள் கல்வி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள்.
இவர்களது விசாரணைகளை தொடர்ந்து ஏனைய குற்றவாளிகளும் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படலாம். ஆயுதபூஜை தின த்தில் வாள்களின் படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் உள்ள ஒரே ஒரு வாளை தவிர அனைத்தையும் கைப்பற்றியுள்ளோம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .
இதேவேளை நல்லூர் அரசடி பகுதியில் வியாபாரநிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு மற்றும் பெற்றோல் குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையையும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர்.
இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்கள் வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடையினுள் உள்ள சீ.சி.ரி கமெராவில் அனைத்தும் பதிவாகியுள்ள போதும் மர்ம நபர்கள் முகத்தினை மறைத்த நிலையில் வந்து ள்ளனர். எனினும் அவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கங்கள் சீ.சி.ரி கமெராவில் பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார் .