கூட்டமைப்பு சர்வாதிகாரப்போக்குடன் செயற்படுகின்றது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வருகின்றது – இளைஞர் அணி

0
309

sampanthan 2364eeஅரசியல் தந்துரோபாயம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் கூறி மூடிய அறைக்குள் நீங்கள் செய்வது அரசியலா? அல்லது விபச்சாரமா? என்ற அளவு சந்தேகம் எழுகின்றது. காரணம் இன்று மகிந்த அரசை சர்வாதிகார அரசு என்று சொல்லி அதை வீழ்த்துவோம் என்று சபதமெடுத்து அதிலே வெற்றியும் கண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சர்வாதிகாரப்போக்குடன் செயற்படுகின்றது என்பது மட்டும் இப்போது வெளிச்சத்திற்கு வருகின்றது காரணம் அரசியல் என்பது வெளிப்படையாக செய்யவேண்டிய ஒன்று தாம் முன்னெடுக்கும் ஒவ்வெரு நகர்வுகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்தி மக்களை தெளிவுபெறச்செய்யவேண்டியது அரசியல்த்தலைவர்களது கடமை இதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்யத்தவறிவிட்டது என்று இளைஞர் அணியினர் கூறியுள்ளார்கள். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

ஈழத்தமிழனாக இந்த இலங்கைத்தீவிலே பிறந்த ஒவ்வெரு குடிமகனும் இந்த சிங்கள ஆட்சியாளர்களாலும் சில சுயநலவாத அரசியல்வாதிகளாலும் வஞ்சிக்கப்பட்டார்கள் எத்தனையோ இளைஞர்கள் தமது வாழ்கையினை இழந்து நடுவீதியிலே அரசியல் அனாதைகளாக நிற்கின்றார்கள் இதையெல்லாம் நாம் உங்களுக்குச்சொல்லிக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றோம் காரணம் இன்றைய இளைஞர்களாக இருக்கும் நாம் பிறந்த 80களிலேயே நீங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளீர்கள் என்பதை வரலாறு வலுவாக பதிவுசெய்துள்ளது.

இதற்கு நாம் தலை வணங்குகின்றோம் ஆனால் அதற்காக இன்று மூத்த தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள் எல்லோரும் செய்வது சரி என்றும் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும் என்றும் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க இன்றைய சூழலிலே நாம் தயாராக இல்லை எனவே இதுவரை முடங்கிக்கிடந்த இளையவர்களையெல்லாம் தட்டி எழுப்பி சமகால அரசியல் சம்மந்தமான ஒரு தெளிவை உண்டுபன்னுவதற்கான பல திட்டங்களை உருவாக்கி அதை ஒவ்வொன்றாக செயற்படுத்துவதற்கு தயார்நிலையில் உள்ளோம்.

மேலும் விடுதலைப்புலிகளின் ஆயுதபலம் வீழ்த்தப்பட்டதின் பிற்பாடு எமக்கான சுதந்திரத்தினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெற்றுக்கொடுக்கும் என்று ஆணித்தரமாக நம்பினோம் அதன் அடையாளமாக கூட்டமைப்பிலே எந்த வேட்பாளரை நீங்கள் களமிறக்கினாலும் அவர்களை வெல்லவைத்துக்கொண்டே இருக்கின்றோம். ஆனால் ஒவ்வொருமுறையும் பல தேர்தல்கள் வருகின்றது ஒவ்வொருமுறையும் வாக்களித்து வேட்பாளர்களை வெற்றிபெறவைத்து தமிழர்களாகிய நாம் தோற்றுவிடுகின்றோம் இதற்கான காரணம் என்ன ?என்று ஆழமாக ஆராய்து பார்க்கும்போது எமது தலமைகள் மீது எமக்கு வலுவான சந்தேகம் எழுகின்றது. காரணம் இன்று கூட்டமைப்பிற்குள் சில சுயநலவாத அரசியல்வாதிகள் உருவாகிவிட்டார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இங்கே கிடையாது (பூனை இல்லாதவீட்டிலே எலி சன்னதமாடும் ) என்பதைப்போல புலிகள் இல்லாத இந்த காலகட்டத்தில் சில குள்ளநரிகள் சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த தமிழினத்திற்கு குழிபறிக்கத்தெடங்கிவிட்டார்கள் என்பதை இளைஞர்களாகிய நாம் நன்கு உணர்ந்துகொண்டுள்ளோம் ஆனால் அதற்கு எதிராக குரல்கொடுக்கவோ போராடவோ முடியாத மந்தைகளாக அனுபவசாரிகள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் கட்டுண்டு நின்றோம் இவ்வளவு காலமும். ஆனால் இனியும் அவ்வாறு நிற்போமேயானால் எமது இனம் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ளவேண்டிய சூழல் உருவாகிவிடும் எனவே அதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை.

ஐம்பது என்றால் அனுபவம் என்று சொல்வார்கள் ஐம்பதிலே தடுமாற்றமும் வரும் எனவே இனி மூத்த தலைவர்கள் மட்டும் தீர்மானிக்கும் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை இளையசமுதாயத்தின் சக்தியும் அதன் பலமும் என்ன என்பதை உலகம் அறியும். அன்று ஆயுதப்போராட்டம் வலுவடைந்து இருந்த காலத்திலே கால் மிதிக்கும் கற்களாக வீதிகளில் கிடந்த தமிழனை எல்லாம் பிரபாகரன் என்ற சிற்பி செதுக்கி எடுத்து போர்க்களம் அனுப்பி வைத்தார். ஆனால் இன்று துள்ளித்திரியவேண்டிய கண்டுக்குட்டிகளுக்கு மூக்கணாம் கயிறுபோட்டு கட்டிவைப்பதைப்போல எங்கள் இளைய சமுதாயத்தின் செயற்பாடுகள் அனைத்தும் அனுபவசாலிகள் என்றும் மூத்த தலைவர்கள் என்றும் சொல்லிக்கொள்ளும் ஒருசில அரசியல்வாதிகளால் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் தடைகளைத்தாண்டி வருகின்றோம் தலைவர்கள் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல சுதந்திர தாகம் தீர்க்க.

இவளவு காலமும் எத்தனை போராட்டம் எத்தனை இடப்பெயர்வு எத்தனை உயிரிழப்பு அதையெல்லாம் வார்த்தைகளால் அவளவு இலகுவாக வர்ணிக்க முடியாது. கூட்டில் இருந்து சுதந்திரமாக பறந்து செல்ல ஆசைப்பட்டு கீழே தவறி விழுந்த இந்த மண்ணின் குஞ்சுகளின் விடுதலை எப்போது? சாதிக்க இருந்த சாதனை முன்னேற இருந்த முயற்சி இளமை தந்த காதல் காதல் தந்த நினைவுகள் என்று அத்தனைக்கும் விலங்கிட்டுப்பூட்டி கைதிகளாக சிறைவைக்கப்பட்டவர்களின் விடுதலை எப்போது?? அரசியல் தந்துரோபாயம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் கூறி மூடிய அறைக்குள் நீங்கள் செய்வது அரசியலா? அல்லது விபச்சாரமா? என்ற அளவு சந்தேகம் எழுகின்றது. காரணம் இன்று மகிந்த அரசை சர்வாதிகார அரசு என்று சொல்லி அதை வீழ்த்துவோம் என்று சபதமெடுத்து அதிலே வெற்றியும் கண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சர்வாதிகாரப்போக்குடன் செயற்படுகின்றது என்பது மட்டும் இப்போது வெளிச்சத்திற்கு வருகின்றது காரணம் அரசியல் என்பது வெளிப்படையாக செய்யவேண்டிய ஒன்று தாம் முன்னெடுக்கும் ஒவ்வெரு நகர்வுகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்தி மக்களை தெளிவுபெறச்செய்யவேண்டியது அரசியல்த்தலைவர்களது கடமை இதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்யத்தவறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

நாங்கள் நேசிக்கும் நேசித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இன்று மிகவும் ஆழமாக விமர்சனம் செய்யும் அளவு சூழலை உருவாக்கிவிட்ட பெருமையும் கட்சியின் மூத்த தலைவர்களாகிய அனைவரையும் சாரும் காரணம தமிழரசுக்கட்சியில் இருந்து அனந்தி சசிதரன் அவர்களை எந்த ஒரு காரணமும் இன்றி வெளியேற்றியுள்ளீர்கள். இது நிச்சயமாக கட்சியின் ஒருசில சுயநலவாதிகளின் விருப்பமும் அவர்கள் எடுத்த முடிவும் என்பதை ஒட்டுமொத்த தமிழர்களும் அறிவார்கள் உன்மையிலே காணமல்ப்போன உறவுகளுக்காக குரல்கொடுத்துவருபவரும் வடமாகணசபையின் உறுப்பினருமான அனந்தி சசிதரன் அவர்கள் இந்த கொடிய போரல் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இந்த கொடியபோரினால் நேரடியாகபாதிக்கப்பட்ட அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தான் போட்டியிடும் 2 வேட்பாளர்களையும் நிராகரிப்பதாகவும் அதற்காக சில நியாயமான சில காரணங்களையும் அவர் முன்வைத்திருந்தார். அது அவரது தனிப்பட்ட விருப்பம் அவரது மனக்குமுறல் அதற்காக அவரை கட்சியில் இருந்து நீங்கள் நீக்கவேண்டும் என்றும் விசாரணைக்குழு அமைக்கவேண்டும் என்றும் ஆர்ப்பரிப்பதும் பூச்சாண்டி காட்டுவதும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே என்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக உழைத்த நாம் முதல் முறையாக அதற்கு எதிராக போர்க்கொடியையும் தூக்குவோம்.

தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்று தொடர்ந்தும் வலியுறுத்திவரும் அனந்தி சசிதரனை கட்சியில் இருந்து நீக்கவேண்டாம் என்று நாம் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்த் தேசியத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமிழ் இளைஞர்கள் போராடினார்கள் என்ற பழியினை நீங்கள் சுமக்கவேண்டாம். அனத்தி சரிசதரன் மீது உங்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சரியா தவறா என்று நாம் மாவட்டரீதியாக கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். அதனையும் உங்களுக்கு அனுப்பிவைப்போம். எண்பதாயிரம் மக்களின் விருப்பத்துக்குரிய ஒருவரை ஓரிருவருக்கு பிடிக்கவில்லை என்று நீக்குவதை ஒருபோதும் எமது இளைஞர் அணி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எனவே நல்லதோர் முடிவினை உடனடியாக கட்சியின் தலைமைப்பீடம் எடுக்கும் என்று நம்புகின்றோம்

நன்றி
இளைஞர் அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here