இறந்தவர்களை 3 ஆண்டுக்கு ஒருமுறை தோண்டும் விநோத பண்டிகை!

0
335

டொராஜன் என்று அழைக்கப்படும் இந்தோனேஷிய சுலாவெசி பகுதி மலைவாழ் மக்களிடம் ஒரு வித்தியாசமான சடங்கு உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தின் இறந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்து அவற்றிற்கு மேக்கப் போட்டு மரியாதை செலுத்தும் விநோத பண்டிகை ஒன்றை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த மக்களுக்கு இந்தப் பண்டிகைதான் மிக முக்கியமான பண்டிகை ஆகும். தங்கள் இனத்தின் முன்னோர்களின் ஆன்மா தங்களுடன் வாழ்வதாகவும், மனித வாழ்வில் மரணம் ஒரு முடிவல்ல என்றும் அவர்கள் நம்புவதால் இந்தப் பண்டிகையை கொண்டாடுவதாக தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தங்கள் குடும்பத்துக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், வெளியூர் போய் அங்கே இறந்து போனால் தனது உடல் இச்சடங்கை தவற விட்டு விடக்கூடும் என்பதாலும் அவர்கள் அந்தப் பகுதியைவிட்டு எங்கும் வெளியேறுவதில்லை.

இக்காரணங்களால் இப்படி ஒரு இன மக்கள் இந்தோனேஷியாவில் வாழ்வதே கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்பு வரை வரை யாருக்கும் தெரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here