
அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பஸ் உடன் எதிர்த்திசையில் வந்த வான் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உம்ராவை நிறைவு செய்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாலமுனையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்த வான் சாரதி உள்ளிட்ட மேலும் 19 பேர் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.