தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் நான்கு பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக வடக்கில் பல பகுதிகளில், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின் விசாரணையின் கீழ் 3 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த 14 ஆம் திகதி 16 ஆம் திகதி அன்றும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 32 மற்றும் 37 வயதுடைய இருவர் கிளிநொச்சியில் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றினை சுற்றி வளைத்த போது அங்கிருந்து இரண்டு சக்திவாய்ந்த கிளைமோர் குண்டுகளை கைப்பற்றப்பட்டுள்ள தாக தெரிவிக்க பட்டுள்ளது.
அதனை அடுத்து திருகோணமலை பகுதியில் ஒருவரையும், மருதங்கேணி பகுதியில் ஒருவரையும் சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்தபோது அவர்களிடம் இருந்து 2 மற்றும் 8 கிலோ கஞ்சா போதைப்பொருளையும் கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட போராளிகள் கடந்த 20ஆம் திகதி நீதிமன்றில் அஜர்படுத்தியபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதன் பிரகாரம் தற்போது அனுராதபுர சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கொலை அச்சுறுத்தலினை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினார் சுமந்திரனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்ட போராளிகள் ஏதோ ஒரு குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப் படுகின்றனர் அல்லது மர்மமான முறையில் இறக்கின்றனர்.