பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் புத்தாண்டு விழா 2048!

0
657

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் 22.01.2017 அன்று, தமிழ்ச்சோலை மற்றும் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் இணைந்து திருவள்ளுவர் ஆண்டு 2048 ஐ வரவேற்றிருந்தனர். காலை 9.30மணி அளவில்  Salle de la Bourse மண்டபத்தில் பகலவனுக்கு பொங்கல் பொங்கி படையலிட்ட பின் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

பிரதமவிருந்தினர்களாக ஸ்ராஸ்பூர்க் நகரின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்னோல்ட் யுங் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு.மோறர் அவர்கள், தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் சட்டத்தரணி சியுங் அவர்கள், அருட்ந்தை ஜெரார்அவர்கள், அருட்தந்தை கலான் அவர்கள், ஆர்மேனிய நாட்டைச் சேர்ந்த சங்க உறுப்பினர்கள், இந்திய – அல்சாசு சங்க உறுப்பினர்கள் எனப் பல்வேறு  உறவுகள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டுசிறப்பித்திருந்தனர்.

தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.   இச்சந்தர்ப்பத்தில் தமிழ்நாட்டு உறவுகளின் ஏறதழுவலுக்கான உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டி நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

அதேவேளை பாரீஸ் நகரம் சென்று திருக்குறள் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கேடயமும், சான்றிதழ்களும், பதக்கங்களும் கொடுக்கப்பட்டன.

இதேவேளை ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து வெளிவரும் DNA பத்திரிகை தமிழர் திருநாளாம் பொங்கல் விழா செய்தியினை முன்னரிமை கொடுத்துப் பிரசுரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SONY DSC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here