யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் தீ விபத்தில் பல்கலைகழக மாணவர்களுக்கு எதுவித உயிர்ப் பாதிப்பும் ஏற்பட்டிருக்காத போதும் மாணவர்கள் பலரது உடமைகள் பொருட்கள் தீயில் எரிந்தும் நாசமாகியுள்ளது.
இவ் தீ விபத்து சம்பவமானது நேற்றைய தினம் நண்பகல் ஒரு மணியளவில் யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய பெண்கள் விடுதியிலேயே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவ் தீ விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் குறித்த விடுதியில் இடது பக்கத்திலுள்ள கட்டடத்தின் முதலாம் மாடியில் உள்ள மாணவிகளின் ஒரு பகுதி விடுதியில் தீயானது பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இத் தீயானது விடுதியின் ஏனைய அறைகளையும் பற்றிக் கொண்டது. இதனையடுத்து உடனடியாக விடுதி நிர்வா கத்தினால் மின் துண்டிப்பானது மேற்கொள்ளப்பட்டு மாநகர சபை தீயனைப்புபடைக்கு அறவிக்கப்பட்டது. அத்துடன் குறித்த விடுதியின் தீ பரவிய அறை உட்பட ஏனைய அறைகளிலும் சிக்குண்டு இருந்த மாணவி களை அறைகளை உடைத்து வெளியே கொண்டு வந்திருந்தனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மோசமாக பரவியிருந்த தீயினை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இருந்த போதிலும் தீயின் வெப்பமானது தொட ர்ந்தும் அதிகளவாக காணப்பட்டதுடன் தீ பரவிய அறை மற்றும் அதனை அண்டிய அறைகளில் தொடர் வெடிப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் காணப்பட்டிருந்தது. மேலும் புதிய கட்டிடமாக இது காணப்பட்டதாலும் தீயை அணைப்பதற்காக அதிகளவான நீர் பாச்சப்பட்டதாலும் தொடர்ந்தும் இக் கட்டத்தில் வெடிப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் விடுதியில் இருந்த மாணவிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அத்துடன் இவ் தீ விபத்தால் மாணவிகள் பலரது உடமைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்நிலையில் தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து மாணவர்களை பாதுகாப்பாக அக் கட்டடத்தை விட்டு வெளியேற்றியிருந்தனர்.
அத்துடன் இத் தீ விபத்தானது குறித்த அறையில் ஏற்பட்ட மின்னொழுக்கின் காரணமாகவே ஏற்பட்டிரு ந்ததாகவும் இதில் எந்தவொரு மாணவருக்கும் காயங்களோ உயிர் சேதங்களோ ஏற்படவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்.