வேலணை மத்திய கல்லூரியின் பிரதான வாசலில் அமைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலை ஈ.பி.டி.பினரால் சிதைக்கப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு விடுமுறைக்காக விடுதியில் இருந்த மாணவர்களும், அலுவலர்களும் சென்றிருந்த சமயம் யாரும் அற்ற சர்ந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரஸ்வதி சிலையின் விணை மற்றும் கைகள் உடைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிலையினைச் சுற்றியிருந்த பூச்சாடிகளும் வீசி எறியப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசாவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஈ.பி.டி.பியினரே இந்த சிலையை உடைத்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.