முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடைகளை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் அவர்களது பூர்வீக வாழ்விடங்கள் தொடர்ந்தும் சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இதனை விடுவித்து தங்களது வாழ்விடங்களுக்குச் சென்று வாழ்வதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு தொடர்ந்து பல்வேறு போராட்டத்தினை இம் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த ஆண்டில் ஒரு பகுதி கால்நடைகளைப் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் அதன் அனுமதி உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஆனால், தற்போது சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது கால்நடைகள் ஏதோ ஒரு விதத்தில் களவாடப்பட்டு வருகின்றன.
எனவே எஞ்சியுள்ள கால்நடைகளை மீட்டுத் தருமாறு அதன் உரிமையாளர்கள் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.