உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடம்

0
678

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் காணாமற்போனோர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் காலவரையறையற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நால்வரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வைத்தியர்கள் குழுவினர் பரிசோதனை நடாத்தியதுடன் தொடர்ந்தும் உண்ணாவிரதம் மேற்கொண்டால் மேலும் உடல் நிலை கவலைக்கிடமாக வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here