மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை ! பிள்ளையான் மீது குற்றச்சாட்டு .

0
469

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், பிள்ளையானின் உத்தரவுக்கு அமைய கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், மட்டக்களப்பு முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) உத்தரவிற்கமைய கொலை செய்யப்பட்டதாக சிறீலங்கா சட்டமா அதிபர் நேற்று (24.01.2017) உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பிள்ளையானின் உத்தரவிற்கமைய , மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் சாட்சி கிடைத்து ள்ளதாக சிறீலங்கா சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சா ந்தன் என்ற நபரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக க்ரிப்பிடப் பட்டுள்ளது .இதை நிராகரித்த பிள்ளையான் தரப்பு, தனது மனுதாரருக்கு எதிராக எவ்வித சாட்சியும் இல்லாமல் பய ங்கரவாத தடைச்சட்டத்தில் நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், கொலை தொடர்பில் பிள்ளையானுக்கு எதிராக கடுமையான குற்ற ச்சாட்டு தாக்கல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here