உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்டு புதுடில்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று மாலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதுடில்லியில் உள்ள பிரதமரின் உத்தி யோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந் தப் பேச்சுவார்த்தையின்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட் டுள்ளன.
குறிப்பாக, தேர்தலின் பின்னர் இலங்கையின் புதிய அரசாங்கம் நல்லிணக்க செயற்பாட்டில் முன்னெடுத்துள்ள நடவடிக்கை கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்
கள சமரவீரவிடம் இந்திய பிரதமர் நரேந் திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இதன்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்புவிடுத்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அழைப்பை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ளார். அதன்படி இவ்வருடம் மார்ச் மாதமளவில் இந்திய பிரதமர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இது இவ்வாறு விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ளார்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது இந்திய விஜயத்தின்போது நேற்று முன்தினம் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்.
இந்ந சந்திப்பின் போது சுஷ்மா சுவராஜை, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் பங்களிப்புடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டள்ளது.
மேலும் இந்த சந்திப்பின்போது இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பாகவும் இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். இலங்கை அகதிகளை இலங்கையில் மீண்டும் குடி அமர்த்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் முன்னர் பணியாறறிய இந்திய தூதுவர்கள் சிலரையும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். முன்னாள் இலங்கைக்கான இந்திய தூதுவர் நிருபம் சென் உள்ளிட்ட பலரையும் மங்கள சமரவீர சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவாக பேச்சு நடத்தியுள்ளனர்.
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற மங்கள சமரவீர மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்திய விஜயம் அமைந்துள்ளது.