
அரச காணிகளை இரவோடு இரவாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்பொழுது இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர், சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் திருநாள் உழவர் விழா வந்தாறுமூலை அம்பலத்தடி உழவர் சிலை அருகில் அருகில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுத்தாலும் அதற்கு அஞ்சப் போவதில்லை என்றும் மக்களின் காணிகளை சுவீகரிக்க விட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் முஸ்லிம் மக்களுக்கோ, சிங்கள மக்களுக்கோ துரோகம் செய்பவர்களாக இருக்க மாட்டோம் என்று குறிப்பிட்ட அவர், அதற்காக அரச காணிகளை பணத்தைக் கொண்டு பெறுவது பிழையான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் காணிகளை சுவீகரித்தால், சொத்துக்களை முடக்கினால் அதனை பொதுமக்கள் வெளியில் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.