கிளிநொச்சி- திருவையாறு பிரதேசத்தில், முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கராளசிங்கம் குலேந்திரன் என்பரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காப்புறுதி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த இவர் கடந்த வாரம் 13 ஆம் திகதி வெளியில் சென்றிருந்தபோது பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பின்னர் அறியக்கிடைத்துள்ளது.அவர் தற்போது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு வருவதாகவும் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இதே திருவையாறு பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளியான முருகையா தவவேந்தன் என்பவர் நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் புகுந்து கைது செய்யப்பட்டார். என்பதும் இங்கு குறிப்பிட்டத்தக்கது.
இறுதி யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தி டம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டு வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகள் இவ்வாறு மீண்டும் இலக்கு வைக்கப்படுவது குறித்து முன்னாள் போராளிகள் மத்தியில் பெரும் பதட்டமான நிலை நிலவிவருகின்றமையும் சுட்டிக்காட் டத்தக்கது.