கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் உந்துருளி விபத்து; இளைஞன் பலி!

0
201

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பரந்தன் பகுதியிலிருந்து புளியம்பொக்கணையில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது, எதிர் திசையில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லொறி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

புளியம்பொக்கனை கண்டாவளையை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது,

ஊடகத்துறையின் இளவல் முரளி கடந்த வருடமே ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறிறை முடித்து கனவுகளோடு காத்திருந்தவேளை காலன் அவனைக் கவர்ந்து சென்றுவிட்டான்.

ஜல்லிக்கட்டுப் பாரம்பரியத்தை மீட்கப் போராடும் தமிழக மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்றலில் இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்புகையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here