239 உயிரை பலிகொண்ட மலேசியா விமானத்தை தேடும் பணி நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் திகதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் பயணமான மலேசியா விமானமான எம்.எச் 370 நடுவானில் மாயமானது.
பின்னர், சில தினங்களுக்கு பிறகு விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்ட்டது.
எனினும் மலேசியா, அவுஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து இந்தியப்பெருங்கடலில் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
தற்போது, 3 ஆண்டுகள் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்பதால் கடலுக்குள் விமானத்தை தேடும் பணி நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆனால், பயணிகள் மற்றும் விமான குழுவினரின் குடும்பத்தினர், தேடும் பணியை நிறுத்துவது பொறுப்பற்ற செயல் என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.