நெதர்லாந்தில் மாணவன் தாருக்சனின் மரணம் தொடர்பில் கண்டன ஊர்வலம்!

0
426
நெதர்லாந்து நாட்டில் சக மாணவர்களின் கேலிப்பேச்சு மற்றும் தொந்தரவுக்கு உள்ளாகி மன விரக்தியடைந்து கடந்த (08.01.2017)ஞாயிற்றுக்கிழமை தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட செல்வம் தாருக்சன் (வயது -15) என்ற தமிழ் மாணவனின் இறுதி நிகழ்வுகள் கடந்த (16.01.2017) திங்கட்கிழமை நெதர்லாந்தில் இடம்பெற்றது.
இதேவேளை, குறித்த மரணத்தின் காரணத்தைக் கண்டித்தும் இனிமேல் இவ்வாறான சம்பவம் எந்த ஒரு மாணவர்களுக்கும் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கண்டன ஊர்வலம் ஒன்று கடந்த (15.01.2017)  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்த ஊர்வலத்திலும் இறுதி நிகழ்விலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்தார்.

கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், உறவினர்கள் என அனைவரும் தமது கைகளில் மெழுகுவர்த்தி, பதாதைகள் என்பவற்றைத் தாங்கிச் சென்றதைக் காணமுடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி சம்பவம் குறித்து நெதர்லாந்து ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
(எரிமலைக்காக நெதர்லாந்தில் இருந்து பிரதீபன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here