
மேற்படி பகுதியில் நேற்று மதியம் 2.00 மணியளவிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதி வளைவு சமிக்ஞை கம்பத்தில் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோ.சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.
அவ்வீதியால் பயணித்தவர்கள் காயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வமுத்து சுரேஸ் (வயது 25) என்ற இளைஞர் மரணமடைந்தார்.
படுகாயமடைந்த நபரான புத்தூர் கிழக்கைச் சேர்ந்த சத்தியசீலன் டேவிட் வயது 24 என்பவரே உடனடியாக மேலதிக சிகிச்சைக் காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.