
குறித்த விடுதிக்கு வந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து பார்த்த பொழுது குறித்த நபர் உயிரிழந்து இருந்தமை தெரியவந்துள்ளது. சுவிஸ் நாட்டின் பிரஜையான உயிரிழந்த நபர் கடந்த ஐந்து மாதங்களாக குறித்த விடுதியிலேயே தங்கியிருந்துள்ளார். சாவகச்சேரியை சொந்த இடமாகவும் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்ற கணபதிப்பிள்ளை குணரட்ணம் (வயது 57) எனபவரே உயிரிழந்தவர் ஆவார்.
சடலத்தை நீதிவான் பார்வையிட்டு விசாரணை செய்த பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார் மேற்படி மரணம் தொடர்பில் அப்பகுதியில் விசாரணைகளையும் முன் னெடுத்துள்ளனர்.