தமிழர்களை அடக்கி ஆழ நினைத்ததாலேயே தமிழ் இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்க நேரிட்டது என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தனபாலசிங்கம் புஸ்பாம்பாள் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் காணாமல் போன தமிழர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடாத ஆட்சியாளர்கள், தமது கைகளால் அரச படையினரிடம் கையளித்த பிள்ளைகள் தற்போது எங்கு இருக்கின்றார்கள் என்ற விடயத்தை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையத்தின் ஊடக சந்திப்பு சிலாவத்தை பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது .
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே தமிழர்களை அடக்கி ஆழ நினைத்ததாலேயே தமிழ் இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்க நேரிட்டது என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தனபாலசிங்கம் புஸ்பாம்பாள் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, யுத்த காலத்தில் காணாமல் போன தமிழர்கள் உயிரோடு இருப்பதாகவும், அவர்கள் தொடர்பான பல தகவல்களை அவர்களது உறவினர்கள் அறிந்துகொண்டிருப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயங்களை முழுமையாக அறிந்துகொள்ள மொழி ஒரு பாரிய பிரச்சனையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும்வரை ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர் சுமித்த ஹட்சன் சந்திரலீலா கோரிக்கை விடுத்து ள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தை சிங்கள மாவட்டமாக பிரகடனப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையத்தின் உப செயலாளர் சு. பரந்தாமன் தெரிவித்தார்