சமஷ்டி தொடர்பில் சிங்கள மக்களுக்கு தவறான விளக்கம்!

0
296
சமஷ்டி என்றாலே பிரிவினை என்ற தவறான கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பரப்பி வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளனர்.
இரட்டை நகர உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொ ண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்தார்.
இந்நிலையில் சமஷ்டி தீர்வை  அரசாங்கம் நிராகரிக்கின்ற நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன வென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சமஷ்டி மூலம் ஒரே நாட்டிற்குள் எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தர தீர்வு வேண்டுமென வலியுறுத்தினார்.
கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மார்க்கம் நகரம், மற்றும் முல்லைத்தீவு நகரங்களை இணைக்கும் இரட்டை நகர உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் தைப் பொங்கல் தினத்தன்று இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு நகரினை அபிவிருத்தி செய்யும் வகையிலும் அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கிலும் கனடாவில் வாழும் தமிழ் தொழில் அதிபர்கள் முதலீடுகளை செய்யும் நோக்குடன் இரட்டை நகர திட்டம் கைசாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here