சசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.. ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க ராஜ்நாத்சிங் பரிந்துரை!

0
359

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தார்.

 முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி புஷ்பா கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட அதே நாளில், உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த நீதிபதி வைத்தியநாதன், தனக்கும் இதில் சந்தேகம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சி.பி.ஐ விசாரணைக்கான பரிந்துரையும் சேர்ந்து கொண்டு சசிகலா தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது வருமோ என்ற டென்ஷனில் இருக்கும் சசிகலாவுக்கு இது கூடுதல் தலைவலியை ஏற்படுத்திவிட்டதாம்.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கும்போது சில ஆதாரங்களை வழங்க திட்டமிட்டிருக்கிறாராம் சசிகலா புஷ்பா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் நடந்த விவரங்களை ஆவணமாகத் தொகுத்தும் வைத்துள்ளாராம். சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது, இந்த ஆதாரங்களை அவர் வழங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது கணவரை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து தாக்கியவர்களை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என சூளுரைத்துள்ளாராம், சசிகலா புஷ்பா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here