இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் பாதசாரிகள் மீது லொறி மோதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெருசலேத்தில் பிரபலமான the Armon Hanatziv சாலையிலே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தின் போது, வேகமாக வந்த வெள்ளை மெர்சிடிஸ் லொறி ஒன்று திடீரென சாலையில் சென்றுக்கொண்டிருந்த மக்கள் மீது மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 10 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. லொறி ஓட்டுநர் சுடப்பட்டுள்ளார்.
தாக்குதலை தொடர்ந்து சம்பவியடத்திற்கு 50 அவசர உதவி வாகனங்கள் மற்றும் மீட்டுபடையினர் விரைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலர் நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது வரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்க்கவில்லை.
சமீபத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்புடைய நபர், ஜேர்மனி தலைநகர் பெர்லின் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லொறி மோதி தாக்குதலில் ஈடுபட்டார். இதில் லொறி ஓட்டுநர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவுக் கூரதக்கது.