பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 22 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், ஈகைத்தீ முத்துக்குமாரின் 6 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும்.

0
834

பிரான்சு திறான்சி நகரில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினராலும்  தமிழீழ மக்களாலும் தாயகவிடுதலையில் தனக்கெனவொரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட கேணல் கிட்டுவும் அவரோடு வங்கக்கடலில் வீரகாவியமான ஒன்பது வீரவேங்கைகளையும், 29.01.2009ல் ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றுமாறு கோரி தன்னைத்தானே தீயினுள் எரித்துக் கொண்ட ஈகைத்தீ முத்துக்குமார் அவர்களையும் நினைவு கூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு 18.01.2015 ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்டது.

IMG_0009

பொதுச்சுடரினை திறான்சி தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. நரேஸ்குமார் அவர்கள் ஏற்ற ஈகைச்சுடரினை மாவீரன் லெப். இளங்கீரனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க மலர்வணக்கத்தை மாவீரன் ரூபனின் சகோதரர் அவர்கள் செலுத்திருயிந்தார். தொடர்ந்து இம்மாவீரர்களின் நினைவாக பெரியவர்கள், குழந்தைகள் என வந்திருந்த மக்கள் அனைவரும் தமது சுடர் வணக்கத்தையும்,மலர் வணக்கத்தையும் செய்தனர்.

IMG_0019

கேணல் கிட்டு அவர்கள் பற்றியும் அவர்தம் தோழர்கள் பற்றியும் தமிழீழ தேசியத்தலைவர்களாலும் கூறப்பட்ட விடயங்களையும் அவர்களின் சாதனைகளையும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இவர்களின் அன்றைய காலச் செயற்பாடுகளே இன்று உலகம் முழுவதும் தமிழன் தலைநிமிர்ந்து வாழவொரு வழியேற்படுத்தியிருந்தது என்று வாசித்தழிக்கப்பட்டது.
தமிழீழ மக்களின் உயிரை இந்திய தேசமும், தமிழக அரசம் உடன்காப்பாற்ற வேண்டும் என்று கேட்டு தன்னுரை மாய்த்துக் கொண்ட ஈகைத்தீ முத்துக்குமார் பற்றியும் தெரிவிக்கப்பட்டது. இம் மாவீரர்களின் நினைவுப் பாடல்களுக்கும், எழுச்சிப்பாடல்களுக்கும் நடனமும், மாவீரர்கள் பற்றிய கவிதைகளும், விடுதலைப்பாடல்களும் பாடப்பட்டது.
IMG_0027
சிறுவன் ஒருவர் தனது தனிநடிப்பின் மூலம் காலத்தின் தேவைகருதிய கருவாக நகைச்சுவையுடன் எதிர்வரும் மார்ச் 16 ம் நாள் ஜெனீவாவில் நடைபெறப்போகின்ற நீதிக்கான பேரணி பற்றியும், அதற்கு எல்லோரும் செல்ல வேண்டும் என்றும் கேட்டு மக்களை சிரிப்புடன் சிந்திக்க வைத்திருந்தார். நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்ப்பாக திரு. சத்தியதாசன் ஆசிரியர் அவர்கள் உரையாற்றியிருந்தார்.
சிறீலங்காவின் இன்றைய அரசம், தமிழ் மக்களாகிய எமது இனப்பிரச்சனையில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொள்ளப்போகின்றனர் என்பது பற்றியும் அதில் தமிழீழ தாயக மக்கள் எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டையும் புலத்தில் வாழும் தமிழீழ மக்களாகிய நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெரிவித்திருந்தார்.
தமிழ் சங்ககூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்களும் உரையாற்றியிருந்தார். தாய் மண்ணின் விடுதலைக்காக உயிர் ஈந்தவர்களையும் அவர்களை நெஞ்சில் சுமந்து அவர்களை அவர்களுடைய நாட்களில் சுடர் ஏற்றி மலர் கொண்டு எமது கடமையை செய்து வருவதையும் அது எமது அடுத்த சந்ததியும் நேர்த்தியாக மண்ணின் பாலும் அதன் விடுதலைக்கு உயிர் கொடுத்தவர்களுக்கு மதிப்பளித்து செய்கின்ற தொரு வரலாற்றுப் பணி என்றும் கூறியிருந்தார்.
நாம் இத்தோடு நின்றுவிடாது ஒவ்வொரு மாவீரர்களும் எதற்காக உயிர் அர்ப்பணித்தார்களோ அதை நிறைவேற்ற நாம் தொடர்ந்து பாடுபடவேண்டும் என்றும், எதிர் வரும் மார்ச் மாதம் ஐ.நாடுகள் சபையின் 26 வது கூட்டத்தொடர்காலத்தில் 16 ம் திகதி நடைபெறவுள்ள நீதிக்கான பேரணி பற்றியும் அதில் பிரான்சில் இருந்து செல்வதற்கு TGV கடுகதி தொடரூந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், இந்த வருடம் விசேடமாக பிரான்சில் இருந்து அரச அரசாபற்ற மற்றும் விடுதலை போராட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் 50 மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பதையும் புலத்தில் வாழும் தமிழீழ மக்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீதி கேட்டு சனநாய முறையில் அரசியல் ரீதியில் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் நீதிக்கான பேரணி கடந்த காலத்தை விட இன்னும் பல மடங்கு பலமிக்கதாக கொண்டு வரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
நினைவேந்தல் நிகழ்வு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உறுதிமொழியுடன் நிறைவு பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here