பெல்ஜியத்தில் குண்டுகள் மீட்பு…! லண்டன், பாரிஸ் உள்ளிட்ட இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

0
275

லண்டன், பாரிஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புது வருட கொண்டாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் களைகட்டியுள்ள நிலையில், மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களை தீவிரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று பெல்ஜியம் நாட்டின் தலைநகரில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனின் பையில் இருந்து பல குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட குண்டுகளில் ‘Allah Akbar’ என எழுதப்பட்டிருந்ததாகவும், சர்வதேச ஊடகமான “எக்ஸ்பிரஸ்” வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது பெல்ஜியத்தில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்தே ஐரோப்பிய நாடுகளுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜேர்மன் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நத்தார் சந்தையில் கனரக வாகனம் ஒன்றை மோத செய்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் வரையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here