கனடா விபத்தில் ஈழத் தமிழர்கள் இருவர் பலி!

0
213
கனடாவில் பிக்கறிங்கில் Taunton வீதி மற்றும் Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதில் நேருக்கு நேர் மோதுண்ட வாகனத்தில் இருந்த இரண்டு இலங்கைத் தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் சதீஸ் லோகநாதன் என்ற (35 வயது) மற்றும் அதீஷ் பாலசுப்பிரமணியம் (21 வயது)  ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் குறித்த இளைஞர்கள் பயணித்த Honda மற்றும் Toyota ஆகிய வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதீஸ் லோகநாதன்,  ஆறு வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றுள்ளார்.
அவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சதீஸ் லோகநாதன், Whitbyயில் உள்ள Charley Ronick’s pub இல் கடமை முகாமையாளராக கடமை புரிகின்றார்.
அவரது திடீர் மரணம் தொடர்பில் உலக செய்திகளில் ஒளிபரப்பப்பட்ட நேரத்தில் அவருடன் பணியாற்றிய சக தொழிலாளர்கள் கலங்கிப் போயுள்ளனர்.
அதீஷ் பாலசுப்பிரமணியம்..
இதேவேளை, அதீஷ் பாலசுப்பிரமணியம், ஒன்ராறியோ நிறுவன பல்கலைக்கழகத்தில் வணிக பட்டம் முடித்துள்ளார் என்றும் அவர் கருணை உள்ளம் கொண்டவராவார்.
இவர் நன்றாக பணிபுரிபவர் என்று அதீஷ் பாலசுப்ரமணியத்தின் சகோதரர் நிரோஜன் கூறியுள்ளார்.
இந் நிலையில்; சதீஸ் லோகநாதன் தனது காரின் கட்டுப்பாட்டை இழக்க காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மது பாவனையோ, காலநிலையோ இந்த பாரிய விபத்துக்கு காரணமாக இருக்க இயலாது என “டர்ஹாம்” பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here