
யாழ் தென்னைப்பயிர் செய்கை சபையினால் தென்னைச்செய்கை பயனாளிகளுக்கு மானிய கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரதம விருந்திரனாகக் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது
பொதுவாக தென்மராட்சி மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். இதற்கு மூலகாரணம் சாதாரணமாக அவர்களுடைய வீடுகளில் பல தென்னை மரங்கள் இருக்கின்றன. அவர்களுடைய வீட்டுச் செலவுக்கும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைளுக்கும் இத் தென்னை மரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இருந்தது. அதற்கு மேலாக அவர்களின் தொழில் மூலம் கிடைக்கின்ற வருமானங்கள் மேலதிக வருமானங்களாக அமைந்ததால் அவர்கள் செழிப்புடன் வாழ்ந்தார்கள்.
நான் 1980, 81களில் சாவகச்சேரியில் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றினேன். அப்போது அம்மக்களின் செழிப்பைக் கண்டு மகிழ்ந்தேன். ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான யுத்தத்தின் போது வருமானம் தரக்கூடிய இப்பயிர்கள் அழிக்க ப்பட்டன.அம்மக்கள் நிர்க்கதியானார்கள். யுத்தத்தால் அரசியல் ரீதியாக மாத்திரமல்ல பொருளாதார ரீதியாகவும் நாம் பாதிக்க ப்பட்டோம். இருப்பினும் மக்களின் அநேக நிலப்பரப்புக்கள் தற்போது விடுவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் இதுவரையில் எந்த விதப் பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளாது தரிசு நிலங்களாகவே காணப்படுவது வேதனைக்குரியது. இப்படிப்பட்ட காணிகளின் உரித்தாளர்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் காணிகளை தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை குத்தகைக்கு எடுத்து அவ ற்றை வளப்படுத்த முன்வரமுடியாதா என்ற கருத்தை பரிசீலிக்க வேண்டும்.
இங்குள்ள தரிசு நிலங்கள் அனைத்தும் தென்னந்தோப்புக்களாக மாற்றப்படவேண்டும். அவற்றுக்கு தென்னை அபிவிருத்தி; சபை யும் அவ்வப் பகுதி பிரதேச செயலர்களும் கிராம உத்தியோகத்தர்களும் அம்மக்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.