2004ஆம் ஆண்டு இதே நாளில் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில், முல்லைத்தீவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் கூடி அஞ்சலி செலுத்தி சர்வமத ஆத்மசாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
கடல்கோள் ஏற்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியானாலும் அதன் நினைவலைகள் இன்றும் அந்த உறவுகளை விட்டு அகன்றதாக தெரியவில்லை. இதேவேளை, முல்லைத்தீவு கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அதிகளவான மக்கள் சுனாமியால் காவுகொள்ளப்பட்டார்கள்.