ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் காவுகொள்ளப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரவை அனர்த்ததில் உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்ட உறவுகளில் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் அமைக்கப்பட்டிருந்த நினைவாலயம் இறுதி யுத்தத்தில் மாவீரா் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டதை போன்று அழிக்கப்பட்டது.
இதன்பின்னர் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அந்த இடத்தில் நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது
2016.12.26 அன்று காலை எட்டு மணிக்கு நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் திறக்கின்ற நிகழ்வும் 8.46 மணிக்கு அஞ்சலி நிகழ்வும் இடம்பெறவுள்ளதாகவும் இதில் உயிரிழந்த மக்களின் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார்.