தும்பளை தெற்குப் பகுதியில் நேற்றிரவு இடம் பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த சிவகுமார் சுவர்ணன் (வயது 20) என்பவரே உயிரிழந்தார்.
இக்கத்திக்குத்தை மரணமடைந்தவரின் சகோதரனே மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சகோதரர்களுக்கிடையில் வீட்டில் சண்டை ஏற்பட்டதாகவும் இதனையடுத்து ஒரு சகோதர் வெளியில் சென்றிருந்த மரணமடைந்த சகோதரனுக்கு தெரிவித்ததாகவும் இதனையடுத்து உடற்பயிற்சி நிலையம் ஒன் றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சகோதரன் அங்கு சென்ற போது மூத்த சகோதரன் அவரை குத்தியதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். இவர் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர் என தெரிவிக்கப்பட்டது. சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது.