யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 11 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் 10 பேரும் வைத்தியசாலையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கமைய 5 பெண்களும் 6 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமை மற்றும் நித்திரையே விபத்திற்கான காரணம் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.