பிரான்சின் அடையாள சின்னமாக திகழும் பாரிஸ் ஈபிள் கோபுர விளக்குகள் ஒரு நல்ல நோக்கத்தை வலியுறுத்தி அணைக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
சிரியாவின் அலெப்போ நகரில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக சிக்கி தவித்து வரும் அந்நாட்டு குடிமக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து பாரிஸ் மேயர் Anne Hidalgo கூறியதாவது, சிரியா பிரச்சனை குறித்து மீண்டும் சர்வரேச சமூகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யும் நோக்கத்திலே ஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.