இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அழைப்பை ஏற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்கும் மங்கள சமரவீர நாளை இந்தியப் பிரமர் நரேந்திர மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்.
இலங்கை இந்திய உறவை மீளக் கட்டியெழுப்பும் வகையிலும், இவ்விஜயம் அமையும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெபேரா தெரிவித்தார். இலங்கையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்ற பின்னர் உயர்மட்ட ரீதியில் நடக்கும் முதலாவது சந்திப்பாக இது உள்ளது. இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய உயர்மட்ட அதிகாரிகளை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இச்சந்திப்பில் சமாதான பேச்சுக்கள் மற்றும் மீனவர் விவகாரம், அகதிகள் பற்றி பேசப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கும் புதுடில்லி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.