கனடாவில் பனிப்புயல் – இயல்பு நிலை பாதிப்பு!

0
237
கனடா ரொறொன்ரோ பிரதேசத்தில் பனிப்புயல் தாக்கம் ஆரம்பமாகியுள்ளது.
பனிப்புயல் தாக்கம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை வேளையில் பனிப்புயல் தாக்கம் தொடங்கியுள்ளது.
ரொறொன்ரோ பகுதியில் ஒரே இரவில் தீவிரமாகிய பனிப் பொழிவின் காரணமாக குளறுபடியான போக்குவரத்து நிலைமை உருவாக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு நகர குழுக்களின் பூரண சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்துள்ளது.
மேலும், ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் காலதாமதமாகவே பயணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று புதன்கிழமையும் அங்கு கடுமையான பனிப்பொழிவு இடம்பெறுவதாக எமது செய்தியாளர் எரிமலைக்குத் தெரிவித்தார்.
(கனடாவில் இருந்து எரிமலைக்காக பிரபு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here