
இப்பிரசுரங்களில் இணைந்த வடகிழக்கே தமிழர் தாயகம் என்பதை வலியுறுத்தியும், தமிழர் தேசம், அவர்தம் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற் றின் அடிப்படையிலான ஒரு சமஷ்டி தீர்வை வலியுறுத்தியும், தமிழர் தாயகத்தில் தமிழரின் இனப்பரம்பலையும், அவர் தம் பௌதிக வளங்களையும் சீர்குலைக்கும் வகையிலான திட்டமிட்ட குடியேற்றங்களை உடன் நிறுத்தக் கோரியும், யுத்தக் குற்றங்கள் இனப்படு கொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என உலகிற்கு உரத்துச் சொல்லவும்,
விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட் டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறலை துரிதப்படுத்தவும், தமிழர் தாயகத்தின் மீதான சிங்கள பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக்கோரியும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த கோரியும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சமச்சீரற்ற அபிவிருத்தி நடவடிக் கைகளுக்கு எதிராகவும், தமிழ்பேசும் மக் கள் மீதான அரசியல், சமூக பொருளாதார, தொழில் வாய்ப்பு ரீதியாக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும்,
கிழக் கிலும் வடக்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் உட்பட தாயகத்திலுள்ள ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் பேரினவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் குறித்த எழுக தமிழ் பேரணி நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு பரப்புரைகள் இடம் பெற்று வருகின்றன. பரப்புரைகளில் கிழக்கு எழுக தமிழ் குழுவின் அங்கத்தவர்கள் பலர் ஈடுபட்டனர்.