எமது வளங்கள் சின்னாபின்ன மாக்கப்படுகிற நிலையில் அவை தொடர்பில் ஆராய்ச்சி செய்வதும் ஆவ ணப்படுத்துதல் செய்வதும் அவசியம் என வடமாகாண முதலமைச் சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவி த்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட \’இருளில் இதயபூமி” எனும் ஆவணப்பட வெளியீடு நேற் றைய தினம் யாழ்.கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்றைய தினம் ஆவணப்படுத்தப்பட்ட படத்தில் காட்டப்பட்டிருக்கும் விபரங்கள் அனைத்தையும் ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளில் இருந்து எம்மை சந்தி க்க வரும் பிரமுகர்களுக்கு எழுத்து மூல மாக நாம் கொடுத்து வருகிறோம் .
அவ்வாறு நாம் முன்னர் தெரிவித்த விடயங்களை படங்களில் மூலம் இவ்வாறு ஆவணப்படுத்துவதும் அவற்றை பல மொழிகளில் ஒவ்வொரு நாடுகளுக்கும் கொடுப்பதாலும் அந்த நாட்டு மக்கள் இங்குள்ள விடய ங்களை இலகுவில் அறிவார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஆயுதம் மௌனிக்கப்பட்ட நிலையில் மக்கள் உலகரீதியாக பிரச்சினைகளை அறிந்தால்தான் எமக்கு நன்மை வரும். உலக நாடுகள் எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்குதல்களை தருகிறார்களோ அந்த அளவு அரசியல் ரீதியான அழுத்தங்களை மாற்றி சிறுபான்மையினருக்கு கிடைக்கவிருக்கும் உரித்து மற்றும் அதிகாரத்தை நாம் பெற முடியும்.
இவ்வாறு பல பிரச்சினைகள் எம் மத்தியில் நடைபெற்று வருகின்றன. சட்டவிரோத குடியேற்றங்கள் நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மரங்கள் அழிக்கப்படுகின்றன, இவ்வாறாக சட்டவிரோதமான முறையில் நடைபெறும் விடயங்களை நாம் எடுத்து கூறிய போதும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.
குறித்த ஒரு பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலரை சில பிரச்சினைக்குரிய காரணங்களுக்காக இடம்மாற்றம் செய்திருந்தோம். ஆனால் அவர் தற்போது முல்லைத்தீவு மாவட் டத்துக்குரிய அரச அதிபராக வருவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிகிறோம். எனவே யாரோ இவ்வாறான பல நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் இவ்வாறான நடவடிக்கையில் எம்மவர்களும் அதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிகிறோம்.
ஒரு நாட்டில் 72 சதவீதம் வன பிரதேசமாக இருக்க வேண்டும். இங்கு எமது வனபிரதேசங்கள் பல விதத்திலும் சின்னாபின்னம் ஆக்கப்படுகிறது. வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதை ஆராய் ச்சி செய்து பார்க்க வேண்டும்.
ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் 16 அடிக்கு அகழ்வு செய்வதாக கொழும்பில் இருந்து உத்த ரவு பத்திரம் பெற்று வந்து 144 அடி அகழ்வு நடைபெற்றுள்ளது. அது தொடர்பாக கேள்வி கேட்க முடியவில்லை ஏனெனில் இது தொடர்பாக நடவடிக்கை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும். பல விதமான அதிகாரங்கள் மத் திய அரசிடம் இருக்கும் போது அவர்கள் எமக்கு பாதகமான விதத்தில் பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.எம்மால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எமக்கு தந்துள்ள உரித்து அதிகாரத்தையும் விட்டுக்கொடுக்க மறுக்கிறார்கள். அந்த நிலையில் எமது நிலையை உலகுக்கு எடுத்துக்காட்ட ஆவணப்படுத்தல் சிறந்த விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.