யாழில் சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று போராட்டம்!

0
278
இன்றைய தினம் காணாமல் போனோரின் தகவல்களை வெளிப்படுத்தக் கோரியும் பொறுப்புக் கூறலை வலியுறுத்தக் கோரியும் யாழில் இன்று காலை பத்து மணி யளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டத்தினை சமவுரிமை இயக்கம் முன்னெடுக்கவுள்ளது. யாழ்.பிரதான பேருந்து நிலையம் முன்பாக இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இராணுவத்தினராலும், புலனாய்வு பிரிவினராலும் கடத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு என்ன நடந்தது எங்கே உள்ளார்கள்? என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாத நிலையே உள்ளது. கடத்தப்பட்டவர்களின் நிலை தொடர்பில் ஆளும் வர்க்கத்திற்கு தெரிந்துள்ள போதிலும்,அவற்றை எந்த அரசும் வெளிப்படுத்தாத நிலையே உள்ளது.
இதனையே நல்லாட்சி என கூறிக்கொண்டு ஆட்சியில் உள்ள தற்போதைய அரசும் செய்து வருகின்றது.
வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் பல்லாயிரக்கணக்கான மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் பொதுமகன்களும் கடத்தப்பட்டு இருந்தார்கள். இவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்படும் மக்களின் குரல்களை வெளிக்கொணர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.
இந்த நிலையே அவர்கள் கடத்தப்படுவதற்கு காரணமாக இருந்தது. கடந்த 2011 ஆண்டு சர்வதேச மனிதவுரிமை தினத்திற்கு முன்னதாக மக்கள் போராட்ட இயக்கத்தை சேர்ந்த லலித் குகன் ஆகியோரும் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு என்ன நடந்தது? எங்கே உள்ளனர்? என்பது இதுவரை தெரியாத நிலையே உள்ளதுடன் கடத்தல்காரர்களும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையிலேயே கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது? அவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்த கோரியுமே இன்றைய போராட்டம் இடம் பெறவுள்ளது. இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என கோரியுள்ள சமவுரிமை இயக்கம், காலை 9.30 மணிக்கு பஸ்நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here