
தனியாக வசித்து வந்த இவரை காணவில்லை என கிராமவாசிகளால் தேடப்பட்டு வந்த நிலையில் மேற்படி பாழடைந்த கிணற்றில் அவர் சடலமாக மிதப்பதனை அவதானித்த கிராம மக்கள் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சிப் பொலிஸார், கிளிநொச்சி குற்றத்தடயவியல் பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டனர் .
பின்னர் குறித்த சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது அத்துடன் குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கும் நிலையில் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.