பிரான்சு குடியுரிமை மக்களுக்கு  -தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு விடுக்கும் அழைப்பு !

0
484

2017 பிரான்சு பல தேர்தல்களை சந்திக்கும் ஆண்டாக மாறப்போகிறது – இந்த தேர்தல் காலத்தை தமிழராகிய நாம் எவ்வாறு கையாளப்போகிறோம் .  தமிழ் மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கும் . தாயகத்தில் எமது மக்களின் சுதந்திரமான வாழ்விற்கும்  எவ்வாறும் நாம் பயன்படுத்தப்போகிறோம்  என்பதை இப்போது இருந்தே நாம் சிந்திக்கவேண்டும்.

ஜெனீவாவில் மனித உரிமை சபையில், செப்டம்பர் 2015  இல் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் சிறீலங்கா  சர்வேதேச  நீதிபதிகளுடன் இணைந்து  ஒரு விசாரணையை செயல்படுத்த வேண்டும். அதன்  அடிப்படையில் வரும் மார்ச் 2017 மாதம்   அதற்கான கால எல்லை முடிவுற்றபின்பு  அடுத்து என்ன?

தமிழ்மக்களுக்கான நீதி எவ்வாறு அமையப் போகிறது என்ற சூழலின், எமக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் ஆதரவுகள் தேவைப்படும் சூழலில்- பிரான்சில் ஏப்ரல் – மே 2017 நடைபெற இருக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலும்,  அதன் பின் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும், தமிழர்களாகிய நாம் எமது வாக்குகளை எவ்வாறு பயன்படுத்தப் போகின்றோம் என்பதிலேயே தங்கி இருக்கின்றது.

பிரான்சில் பிரஞ்சு பிரஜாவுரிமையை பெற்று வாழும் எமது சமுதாயத்தினர் பலர் இந்நாட்டு அரசியலில் ஈடு பட்டு மாநகரசபைகளில் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் பிரஞ்சு பிராஜாவுரிமையை பெற்றும் அதனால் எமக்கு கிடைத்து இருக்கும் வாக்குரிமையை பயன்படுத்தாமல் நாம் இருக்கிறோம், அந்த வாக்குரிமையை பயன்படுத்தும் முகமாக நாம் வாக்காளர் பட்டியலில் பதியாமலே நாம் இருக்கிறோம்.

இந்த சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன? எவ்வாறு வாக்காளர் பட்டியலில் எம்மை நாம் சேர்த்துக் கொள்வது?

நாம் வாழும் பகுதியில் உள்ள மாநகர சபைக்கு சென்று எமது வாழ்விட அடையாள அட்டை மற்றும் எமது வதிவிட அத்தாட்சி யை பயன்படுத்தி டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் எமது வாக்குரிமையை நாம் வலியுறுத்தி ஆக வேண்டும்.

பிரஞ்சு பிராஜாவுரிமை பெற்ற அனைத்து தமிழ்மக்களை, உங்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here