ஐரோப்பாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பிரான்சு ஸ்ராஸ்பூர்க் மாநகரில், மறைந்த மாண்புமிகு முதல்வர் கலாநிதி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான வணக்க நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ராஸ்பூர்க் வாழ் தமிழ்மக்கள் கனத்த இதயங்களுடன் சுடரேற்றி, மலர் தூவி முதல்வருக்கு வணக்கம் செலுத்தியிருந்தனர். அத்துடன் மறைந்த மாண்புமிகு முதல்வர் கலாநிதி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான இரங்கல் செய்தியும் வெளியிட்டிருந்தனர்.