அடுத்த ஆண்டு கனடா தனது 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில் கனேடிய தேசிய கீதம், தமிழ் மொழியிலும் புதிதாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் , அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, யேர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், தகலொக் ஆகிய 12 மொழிகளையும் தேர்வு செய்த Toronto Symphony Orchestra எனப்படும் பிரபல இசையமைப்பு நிறுவனம், அந்த மொழிகளில் தேசிய கீதத்தை ஒலிப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் கனடாவில் நாடுதழுவிய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் பேசப்படும், தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் கனடாவின் தேசிய கீதம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும், மற்றும் பேசப்படும் மொழிகளில் 12 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த 12 மொழிகளிலும் கனேடியத் தேசிய கீதம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.