வடக்கில் புதிதாக பௌத்த விகாரைகள் அமைக்கப்படவில்லை என்ற ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நிராகரித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் இடம் பெற்ற அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின், நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அக் கட்சியின் விஜித ஹேரத் கிளிநொச்சியில் புதிதாக விகாரைகள் அமைக் கப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறினார்.
இந்நிலையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னதாக கிளி நொச்சியில் ஒரேயொரு விகாரை மாத்திரமே காணப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
விஜித ஹேரத் கருத்துரைக்கையில் வடக்கில், தற்போது புதிதாக பௌத்த விகாரைகள் அமைக்கப் படுவதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பௌத்த விகாரை ஒன்று புதிதாக அமைக்கப்படுவதாக கூறி 400ற்கும் மேற்பட்ட மக்களை தூண்டிவிட்டு பாரிய கூட்டமொன்றை நடத்தினார்கள். உண்மையில் புதிய விகாரை ஒன்று அமைக்கப்படுகின்றதா? இல்லை.
கிளிநொச்சியில் அமைந்துள்ள பிரதான இராணுவ முகாமில் ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அது கோவிலில் இருந்து 50 மீற்றர் தொலைவிலேயே இருக்கின்றது. இவ்வளவு காலமும் ஒரு சிலை இருந்தது ஆகவே சுவர் அமைக்கப்படுகின்றது அவ்வளவுதான்.
எனினும் இதனை பெரிதாக்கி, கோவில் காணியை அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டி போராட்டங்களை நடத்துகின்றனர். எனினும் இது தொடர்பில் பொறுப்புக்கூற வேண் டிய அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
உண்மையில் கோவில் காணி கைப்பற்றப்படவில்லை, புத்தர் சிலை இராணுவ முகாமிற்குள்ளேயே காணப்படுகின்றது. தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பது யார்? அரசியல் ரீதியாக தோல்வியடைந்த வர்களே இதனை மேற்கொள்கின்றனர்.
எனினும் தற்போது யாராவது சட்டவிரோதமாக விகாரைகளை, பள்ளிகளை அமைப்பார்களாயின் அது தவறு. அதனை தடுப்பது அரசாங்கத்தின் கடமை, காணப்படும் விகாரைகளை இல்லாதொழிக்க எவருக்கும் உரிமையில்லை. அதனை நிறுத்து