கடந்த அரசாங்கத்தின் பிரபலமான அரசியல்வாதிகள் மூவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி 8 ஆம் திகதி வரையி லான 39 நாட்களில் ஹெலி கொப்டர்களில் பயணம் செய்ததற்காக இலங்கை விமானப் படைக்கு 830 இலட்ச ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக சிங்களப் பத்திரிகை யொன்று செய்தி வெளியிட்டுள் ளது.
பின்னர் பணம் செலுத்தும் அடிப்படையில் இம் மூன்று அரசி யல்வாதிகளும் விமானப்படை ஹெலிகொப்டர்களை பெற்றுக்
கொண்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்குப் பயணம் செய் துள்ளனர்.
இந்த ஹெலிகொப்டர்களில் அதிக தடவைகள் நாமல் ராஜபக் ஷவே பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது பெல் 412 மற்றும் M.I.-–17 ரக ஹெலிகொப்டர்களில் இவர்கள் இப்பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ இந்தஹெலிகொப்டர்களில் 24 தடவைகள் பயணம் செய்துள்ளார். பஷில் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் இந்த ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை, கண்ணொறுவ, மொனராகலை, புத்தள, தங்கல்ல, கல்குடா, யாழ்ப்பாணம், மன்னார், அரலகங்வில, கந்தளாய், வீரவில, அளுத்கமை ஆகிய பிரதேசங்களுக்கு செல்வதற்கு இந்த ஹெலிகொப்டர்கள் பாவிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணங்களுக்காக பணம் செலுத்துவதாக கூறப்பட்டபோதும் இதுவரை பணம் செலுத்தப்படவில்லை எனவும் அந்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.