த.தே.கூட்டமைப்பு மீதான தாக்குதல் : 3 குற்றவாளிகளுக்கு இரட்டை மரண தண்டனை!

0
283
ஊர்காவற்றுறை – நாரந்தனை பகுதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ள ப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளுக்கு  இரட்டை மரண தண்டனை யும் 20 ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனையும், ஓரு லட்சம் ரூபா அபராதமும் விதித்து யாழ் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி. டி.பி யினர்  2001/11/28 அன்று மேற்க்கொண்ட தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
யாழ் மேல் நிதிமன்ற நீதிபதியினால் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இவ் வழக்கின் குற்றவாளிகளாக 4 பேர் இனங்காணப்பட்டு இருந்தனர்.
குறித்த வழக்கு தொடரினர் தரப்பில் அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்த் மற்றும்குற்ற வாளிகள் தரப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி றெமிடியஸ் மற்றும் சாட்சிகளை நலன் காக்கும் சட்டத்தரணியாக கே.சயந்தனும் ஆஜராகி இருந்த நிலையில், எதிரிகளாக நெப்போலியன், மதனராசா, ஜீவன் மற்றும் கருணா கரமூர்த்தி போன்றோர் விசாரணை செய்யப்பட்டனர்.
இவர்கள் நாரந்தனை சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும். கமல்ஸ்ரோன், ஏரம்பு பேரம்பலம் போன்றோரை கொலை செய்யதமை, 18 பேருக்கு படுகாயம் விளைவித்தமை, வாகனங்களை சேதப்படுத்தியமை போன்ற குற்றங்களுக்கு 1ஆம், 2ஆம், 3ஆம்  எதிகளான நெப்போலியன், மதனராசா, ஜீவன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என இனங்காணப்பட்ட னர்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் இரட்டை மரண தண்டனையும், 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் , ஒரு லட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டதுடன், அபராதம் செலுத்த தவ றின் மேலும் 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
இந் நிலையில் 4ஆம் எதிரியான கருணாகரமூர்த்தி நாரந்தனை சம்பவத்தில் தொடர்புபட வில்லை எனவும் அவர் குற்றவாளி அல்ல எனவும் அவரை விடுதலை செய்யும்படியும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here