அம்மா ஜெயலலிதா மறைவு உலகத் தமிழினத்திற்கு பேரிழப்பாகும்;பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு!

0
1041
பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் இரங்கல் செய்தி!
முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா மறைவு உலகத் தமிழினத்திற்கு பேரிழப்பாகும். தமிழீழப் பெண்கள் அமைப்பினர் நினைவு வணக்கம் செலுத்துகின்றோம். எங்கள் தமிழீழப் போராட்ட வலிமைக்கும் தலைவரின் கொள்கை வழிக்கும் உரம் கொடுத்தார் மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
 இதயத் தெய்வம் வழியில் தமிழீழ மக்கள் மீதான கவனத்தில் சர்வதேச நாடுகள் வியக்கும் படியான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களைத் தமிழக சட்டசபையில் எடுத்ததுடன் அதற்கான போராட்டங்களையும் நடத்திய வீரமிக்க இரும்புப் பெண்மணி.
 உறுதியாக நின்ற தமிழ் மக்கள் பணியில், ஏழை மக்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள் சார்ந்த நிலைப்பாட்டில் கருணையும், கரிசனையும் கொண்டு விளங்கிய அம்மா முதலமைச்சர் ஜெயலலிதாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாக பேரிழப்பாகும்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இரங்கல் உரையில் கூறியதுபோல் “தமிழர்களுக்கு இழப்பு, பாரத நாட்டிற்கே பேரிழப்பு.”
 மக்களுக்காகவே நான் என்ற வார்த்தை வலிமை மிக்க அம்மாவின் விருது வாக்கு. வரலாற்று உருவமாகியது. மக்கள் மதிக்கத் தமிழீழ மக்கள் வணங்க உலகில் வாழும் இதயங்களில் வாழ்பவர் அம்மா என்ற சொல்லுக்கு நிகர் கொண்டு விடாமுயற்சியும் கொள்கைப்  பிடிப்பும் ஆசான் எம்.ஜி.ஆர் நேசத்திற்கும் நிகர்.
 தமிழீழ மக்கள் மீதும் ஆதரவுக்குரல் கொடுத்ததும். எம்.ஜி.ஆர். எம்நெஞ்சில் மறையாது நிற்பவர். அவருடைய திறன் தான் உரம் கொடுத்தது. அந்த இதயதெய்வம் வழிதொழுது நின்ற அம்மா மாண்பு மிகு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு சகாப்தம். என்றும் எங்கள் நினைவில்
“உங்களால்தான் நான்
உங்களுக்காகவே நான்
மக்களால் நான்
மக்களுக்காகவே நான்”
தனக்கென வாழாது தமிழ் மக்களுக்கென வாழ்ந்த அம்மா முதலமைச்சர் ஜெயலலிதாவின் சினிமா, அரசியல் வாழ்வியல் ஒரு சகாப்தம்…தமிழர் தலைவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக என்றும் விளங்கியவர். அவர் தம் நினைவு என்றும் நீங்காது. முதலமைச்சரின் பிரிவால் துயருற்று இருக்கும் எம் தொப்புள் கொடி உறவுகளான உங்களுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு ஆகிய நாங்கள் எம் உள்ளார்ந்த கவலைகளை பகிர்ந்து கொள்கின்றோம். எங்கள் பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பின் ஆழ்ந்த கனத்த கவலைகளை உங்கள் நினைவில் பகிர்ந்து கொள்கின்றோம்.
பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here