பல்கோடித் தமிழ் மக்களின் பெருந்துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் புரட்சித்தலைவியாக அழைக்கப்பட்ட செல்வி. ஜெ. ஜெயலலிதா (கோமளவல்லி ஜெயராம்) அவர்கள் சாவடைந்த செய்தியானது மிகப்பெரும் துயரினை தந்திருக்கின்றது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1991ம் ஆண்டு தொடங்கி பல்வேறு ஆண்டுகளில் 5 தடவைகள் ஆட்சி செய்த ஒர் இரும்புப் பெண்மணி. முன்னைநாள் தமிழ் நாட்டின் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் அ.திமு.க கட்சியில் 1981 ல் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளராக இருந்தவர். மக்கள் திலகம் அவர்கள் மறைந்து இரண்டு வருடங்களின் பின் 1989ல் அதன் தலைமைப் பொறுப்பையேற்று பொதுச்செயலாளரானார். கலைமாமணி, சிறப்பு முனைவர் பட்டம், தங்க மங்கை விருது போன்ற மதிப்புக்களைப் பெற்றுக் கொண்டவர்.
இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாதிகளாலும், அரசுகளாலும் தமிழ்மக்கள் உயிர்கள் பறிக்கப் பட்டு, சொத்துகள், உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட போது தமிழகம் சென்ற எமது மக்களையும், 1983 யூலையில் நடந்த இனக்கலவரத்தில் ஓரிரு நாட்களில் ஐயாயிரத் திற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் சிறீலங்காவின் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட போதும் அதனை தொடர்ந்து இளைஞர்கள், யுவதிகள் தமிழ்மக்களின் உயிர்வாழ்வுக்கும், உத்தரவாதத்திற்கும், பாதுகாப்பிற் காகவும், ஆயுதப்போராட்டத்தில் குதித்த போது அதற்கு ஆதரவாக அன்றைய முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் உதவியபோது உடன் இருந்தவர் முதல்வர் யஐ.யஐயலிதா அவர்களாகும். தனது ஆட்சி யில் பல்வேறு சவால்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து காட்டமான முடிவுகளை எடுப்பதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் திறமைமிக்கவராகவும், சாண க்கியமிக்கவராகவும் இருந்து வந்திருக்கின்றார்.
2009 காலப்பகுதியில் சிங்கள அரசின் தமிழீழ மக்கள் மீதான அதிகோரமான குண்டு வீச்சுத் தாக்குதல்களையும், தமிழ்மக்கள் மீதான படுகொலைகளையும், உடனே நிறுத்துமாறு சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அன்றைய ஆளும் மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களையும், அவர்களோடு தமிழ் நாட்டில் கைகோர்த்திருந்த தி.மு.க அரசிடமும் எவ்வளவோ சனநாயக போராட்டங்களை முன்னெடுத்து உணர்தியிருந்தவர். அதன் பின்னர் 2011ல் தமிழ்நாட்டு தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைந்ததோடு மட்டுமல்லாது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதற்கமைய தமிழீழ மக்களின் நியாயமான சுதந்திரப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டதோடு, தமிழீழ மக்களின் ஒரே தீர்வாக தனித்தமிழீழமே அமைய வேண் டும் என்றும், தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டது ஓர் திட்டமிட்ட தமிழினப்படுகொலையே என்பதையும், அதற் காக சர்வதேச விசாரணை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்றியமை தமிழீழ மக்கள் மனதில் பற்றியயரிந்து கொண்டிருந்த வேதனை தீயில் பால்ஊற்றியது போன்று அமைந்து விட்டது. முன்னைநாள் பிரதமர் ரஜீவ் காந்தி இறப்பில் கடந்த 25 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ்க்கைதிகளின் விடுதலையில் மிகுந்த அக் கறை கொண்டு அந்த விடுதலையை உறுதிப்படுத்துவார் என்று உலகத்தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத நிலையில் சாவடைந்தமை பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக் கின்றது.
தமிழ்நாட்டு கோடானகோடி மக்களை மட்டுமல்ல, தமிழீழத்திலும், உலகம் முழுதும் பரந்து வாழ்கின்ற தமிழீழ மக்களின் மனதிலும் தனக்கெனவொரு இடத்தை கடந்த காலங்களில் ஏற்படுத்திக்கொண்டவர். பல்வேறு துன்ப துயரச்சூழலில் அதிகாரத்திலுள்ளவர்களே அநியாயத்திற்கெதிராக குரல்கொடுக்கவில்லையே என்று ஈழத்தமிழ் மக்கள் ஏங்கிய போது எமக்கு ஓர் உறுதியை தந்த பெண்மணியே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களாகும். இவரின் சாவானது ஒவ்வொரு தமிழ்மக்கள் வீடுகளிலும் ஏற்பட்ட தோர் சாவாகவே கோடிக்கணக்கான மக்கள் நினைக்கின்றார்கள். துயருற்று நிற்கின்றார்கள். இவர்களின் துயரோடு பிரான்சு வாழ் தமிழீழ மக்களும் மிகப்பெரும் துயர்கொண்டு நிற்கின்றோம். ஈழத்தமிழ் மக்களின் ஓர் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்றான முதல்வர் அவர்களின் மறைவானது பேரிழப்பினை தந்திருந் தாலும், இவரின் இலட்சியங்களையும், எதிர்பார்ப்புகளையும் இவரின் சார்பில் ஆட்சியை பொறுப்பேற் கின்றவர்கள் தொடர்ந்தும் பேணுவார்கள் என்று பெரும் நம்பிக்கை கொள்கின்றோம். இவரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அனைத்து உள்ளங்களுடன் நாமும் எமது துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்!
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு