
குருநகர் இறால் வளர்ப்புத் திட்டப் பகுதியை சேர்ந்த ஆர்.ஜெகன் (வயது 31) என்ற நபரே சடலமாக கரையொதுங்கியுள்ளார்.நேற்று முன்தினம் குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற போது, ஏற்பட்ட சூறாவளியின் போது சுழியில் சிக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கடலிற்கு சென்ற மீனவர்கள் சடலத்தினைக் கண்டு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கி யதன் பிரகாரம் உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோ தனை க்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்